accident at Thoppur; CCTV footage released

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படும் நிலையில் தற்போது தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலம் பகுதியில் இரண்டு கார்களும் ஒரு லாரியும் மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

accident at Thoppur; CCTV footage released

தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்றலாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள் மற்றும் கார்கள் மீது மோதியது.இதனால் அங்கு கோரவிபத்து ஏற்பட்டது. காரில் இருந்து மூன்று பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.