சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்ததாராமங்கலம் அருகே மனாத்தாள்ஊராட்சி தொடக்கப்பள்ளியில் பணியாற்றி வந்தவர்கிரிஸ்டி அகஸ்டா ராணி. இவர் நேற்று மாலை தனது மகளுடன் தாரமங்கலம்பேருந்துநிலையம் அருகில் சென்றுகொண்டிருந்தார். சாலையின் விளிம்பில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் மீது பின்புறமாக நங்கவல்லியை நோக்கி சென்றடிப்பர் லாரியானது மோதியதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆசிரியைஅகஸ்டா ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாகஉயிரிழந்தார். இதைக்கண்ட அவரது மகள் கதறி அழுதது மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அந்த காட்சியில் லாரி தடுமாறியோ அல்லது ஓட்டுநர் பிரேக் பிடித்து வண்டியை நிறுத்த முயற்சித்து கட்டுப்படுத்த முடியாமல் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்ததற்கான எந்த ஒரு அனுமானமும் இல்லை. வேண்டுமென்றே மோதியதுபோல சர்வ சாதாரணமாக நடந்திருக்கிறது இந்த சம்பவம். அதோடு அவரை திட்டமிட்டு இடிப்பதற்காக சாலையைவிட்டு இறங்கி விபத்தை ஏற்படுத்திவிட்டு சாலைமீது ஏறி நிற்காமல் சென்றது அந்த லாரி.
இந்நிலையில் லாரியையும், ஓட்டுனரையும் பிடித்த தாரமங்கலம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில்அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்றும், அங்கு செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளுக்கு முறைகேடாக செம்மண் எடுத்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.