Accident in sewer work; Workers buried in the soil

Advertisment

தஞ்சாவூரில்பாதாளசாக்கடை கட்டமைப்பு பணியின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் மண்ணில் புதைந்த இரண்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சை விளார் சாலையில் உள்ள ஜெகநாதன் தெருவில்பாதாளசாக்கடை கட்டமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்காகஜேசிபிமூலம் குழிகள் தோண்டப்பட்டு வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தொழிலாளர்கள் மண்ணில் புதைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு தொழிலாளர்களில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவரை மீட்கும் பணியில்தீவிரமாகதீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.