புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள தட்டான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் சொக்கலிங்கம், அவரது உறவினர் காளிதாஸ் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

Advertisment

அப்போது வடுகாட்டிலிருந்து சத்தியராஜ், ரெங்கநாதன் ஆகிய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நாகுடி நோக்கி சென்றுள்ளனர். மேல்மங்கலம் சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அரசு பள்ளி ஆசிரியர் சொக்கலிங்கம், வடுகாட்டைச் சேர்ந்த சத்தியராஜ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Advertisment

accident

மேலும் ரெங்கநாதன், காளிதாஸ் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா மற்றும் போலீசார், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த காளிதாஸ், ரெங்கநாதன் இருவரையும் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

accident

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment