
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்துள்ள ஓணான்குட்டை பகுதியைச் சேர்ந்த பெண்கள், கடந்த 8 ஆம்தேதி பெங்களூருவிற்கு ஆன்மீக சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நாட்றம்பள்ளி அருகே அவர்கள் வந்தவேன் பஞ்சராகி நின்றது. அப்பொழுது பின்னே வந்த ஈச்சர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தனர்.
உயிரிழந்த ஏழு பேர் உடலும் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு செல்லக்கூடிய சாலையில் 5 சடலங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இறந்தவர்களுக்கு அரசு சார்பில் அறிவித்துள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குஅரசு தலா ஒரு லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும்அறிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. அதேபோல் இந்த விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி,உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும்அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)