ராமேஸ்வரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலத்தில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பாம்பன் பாலத்தில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து பாம்பன் பாலத்தில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இதனால் பேருந்தில் இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Advertisment

accident at pamban bridge

இதுகுறித்து பயணிகள் தெரிவிக்கும்போது, “கடும் மழையின் காரணமாக பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், சிறிது தூரம் முன்பாக இந்த சம்பவம் நடந்திருந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும்” என தெரிவித்ததுடன், பேருந்து தடுப்பு சுவரில் மோதியவுடன் பேருந்தில் இருந்த பயணிகள் பேருந்தை விட்டு இறங்கி ஓடினர் என தெரிவித்தனர். இந்நிலையில் பாம்பன் பாலத்தில் பலத்த மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் விபத்தை தடுக்க தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.