தேனி அருகே தனியார் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
போடியிலிருந்து உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வேன்மூலமாக கிராமத்தினர் சென்றுள்ளனர். தீர்த்தத்தொட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக வேன் மீது மோதியது. இந்த நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்தியபேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.