krishna

Advertisment

கிருஷ்ணகிரி அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. அந்த காரை பின்தொடர்ந்து ஒரு கண்டெய்னர் லாரி வந்தது. அதேநேரத்தில் கர்நாடக பேருந்து ஒன்று கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தது, அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மற்றும் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் சென்ற 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காரில் சென்ற ஒருவர், லாரியில் சென்ற ஒருவர் என 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisment

இந்த விபத்து குறித்து தகவலறிந்து அங்கு மீட்புப்படையினர் விரைந்து வந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.