Accident near chengam six passes away

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு மோதிய விபத்தில் சம்பவிடத்திலேயே 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

இன்று(23ம் தேதி) இரவு பெங்களுரூவில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து பெங்களுரூ நோக்கி கர்நாடகா பதிவு கொண்ட ஒரு டாடா சுமோ காரும் சென்றுகொண்டிருந்தது. இந்து இரு வாகனங்களும் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே கருமங்குளம் அருகே வந்துகொண்டிருந்தபோது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த 11 நபர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியில் பலியாகினார். மேலும், காரில் இருந்த மற்ற ஐந்து பேரும், அரசுப் பேருந்தில் காயம் அடைந்த சிலரும் செங்கம் மற்றும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் உடல் மீட்கப்பட்ட பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து பகுதியில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.