accident near Ariyalur; 4 people lost their lives

அரியலூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள ஏலக்குறிச்சி பிரிவு என்ற பகுதி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது வேகமாக வந்த கார் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கார் முற்றிலும் சேதமடைந்தது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அலறியடித்துக் கொண்டு காரில் உள்ளவர்கள் மீட்க முற்பட்ட நிலையில் காரில் பயணித்த நான்கு பேரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.