வருங்கால மருத்துவரை பலிகொண்ட வேளாங்கண்ணி தேசிய நெடுஞ்சாலை விபத்து!

எப்பொழுதுமே போக்குவரத்தால் பரபரக்கும் வேளாங்கண்ணி பகுதி கிழக்கு கடற்கரை சாலை இன்று காலை டாக்டராகும் கனவோடு பள்ளிக்கு சென்ற சிறுமி ஒருவரை பலிகொண்டிருப்பது அப்பகுதி மக்களை பதரவைத்திருக்கிறது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்கடைதெரு பகுதியை சேர்ந்தவர்கள் மதியழகன் புனிதா தம்பதியினர். இவர்களுக்கு 16 வயதுடைய மகரஜோதியும் 12 வயதுடை பூபாலன் என இரண்டு பிள்ளைகள். மதியழகன் வேளாங்கன்னியில் பொரிக்கடை வைத்துக்கொண்டு, அதில்கிடைக்கும் வருமானத்தில் இரண்டு பிள்ளைகளையும் அவர்கள் விருப்பத்திற்கு படிக்கவைத்துள்ளார். மகரசோதி நாகூரில் உள்ள கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

accident in nagai velangkanni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்தநிலையில் இன்று சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் தனியார் பள்ளி என்பதால் ஸ்பெஷல் கோச்சிங் என்கிற பெயரில் பள்ளியை செயல்பட்டது. பள்ளியில் தேர்வு இருப்பதாக சாப்பிடாமல்கூட, தனது அப்பாவை அழைத்துவந்து பள்ளியில் விடும்படி கெஞ்சியிருக்கிறார், அவருக்கு கொஞ்சம் வேலை இருந்ததால், உறவினரான பக்கத்து வீட்டைச்சேர்ந்த வீரமணியை அழைத்துக்கொண்டு போக சொல்லியிருக்கிறார்.

அவரும் தனது ஸ்கூட்டியில் வீட்டில் இருந்ரு கிளம்பி தெற்கு பொய்கை நல்லூர் கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றபோது வேதாரண்யத்தில் இருந்து சென்னை நோக்கி வேகமாகவந்த அரசுப்பேருந்து இடித்துவிட்டு சென்றுவிட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு மகரஜோதியை தூக்கிக்கொண்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த பிள்ளை ஏற்கனவே உயிரிழந்துவிட்டது என கூறியுள்ளனர். இதைகேட்ட அவரது உறவினர்களும் பெற்றோர்களும் துடியாய் துடித்து சாலையில் படுத்து அழுதுபுறண்டனர்.

accident in nagai velangkanni

அந்த மாணவியை அழைத்துவந்த வீரமணி லேசான காயங்களோடு மருத்துவமனையில் இருக்கிறார்.

அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு மகரஜோதி டூவீலரை அரசுப்பேருந்துதான் இடித்தது என்பதை கண்டுபிடித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பரிதாபமாக பலியான மாணவியின் உறவினர்களோ," தவமிருந்து பிறந்த பிள்ளை மகரஜோதி, அதனாலதான் அய்யப்பனின் பெயரை அவருக்குவச்சாங்க, அதுக்கு பிறகு ஒரு மகன், இரண்டு பிள்ளைங்களோட தினசரி உழச்சி சம்பாதிக்கிறத பிள்ளைங்க படிப்புக்காகவே செலவழிச்சார், மகரஜோதியின் அப்பாவுக்கு அவர்மீது அவ்வளவு பாசம், டாக்டருக்கு படிக்கனும்ங்கிறது அவளோட லட்சியம் அதுக்காகவே கோச்சிங் செண்டர் போய்கிட்டு இருக்கா, படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்து அலுப்ப ஆயுசாபோய்டுச்சி." என கலங்குகின்றனர்.

accident in nagai velangkanni

"இந்த சாலையில தினசரி ஏதாவது ஒரு விபத்து நடந்துவிடுகிறது. அதற்கு காரணம் இரவு முழுவதும் வாகனத்தை இயக்கிவருபவர்கள் இங்குவந்ததும் பைபாஸ் சாலையாக இருப்பதால் அதிவேகமாக போகின்றனர் அதனுடைய விளைவு, விபத்தாக மாறிவிடுகிறது, தினசரி பஸ் கவிழ்ந்து பலி, வேன் மோதி படுகாயம், லாரிகள் நேருக்கு நேர் மோதல் என அபத்தமான செய்தியாக இருக்கும். இதற்கு காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் எந்தவித நடவடிக்கையும் செய்யவில்லை. இனியாவது செக்போஸ்ட்டுகளில் காவல்துறையை நியமித்து கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்," என்கிறார்கள் சமுகஆர்வலர்கள்.

accident nagai
இதையும் படியுங்கள்
Subscribe