சென்னையில் வேகமாகச் சென்ற தண்ணீர் லாரி முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தாய், மகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை அண்ணாசாலையில் இன்று காலை, ஸ்பென்சர் அருகே வேகமாக சென்ற தண்ணீர் லாரி ஒன்று முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தாய், மகன் மீது லாரியின் முன்சக்கரம் ஏறி பின்சக்கரத்திலும் சிக்கி இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் பாலச்சந்திரன் லாரியில் இருந்து இறங்கி தப்பிச்சென்றார். பின்னர் அருகில் உள்ளவர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த இருவரும் தாயும், மகனும் என்பதும் சேத்துப்பட்டை சேர்ந்த இவர்கள் மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் வைத்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததும் தெரிய வந்தது. பரபரப்பான காலை நேரத்தில் நடந்த விபத்தால் அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.