Advertisment

சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து

An accident in Metro work; 7 people in the bus were seriously injured

Advertisment

சென்னை ராமபுரத்தில் கிரேன் கவிழ்ந்து சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது விழுந்ததில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை ராமாபுரத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ பாலத்திற்கான தூண்கள் அமைப்பதற்காக லாரிகளில் கம்பிகள் கொண்டுவரப்பட்டு இருந்தன. 30 அடி நீளத்திற்கு கட்டப்பட்டிருந்த கம்பிகள் கட்டுமானத்திற்காக கொண்டுவரப்பட்ட கிரேன் மூலம் தூக்கப்பட்டன. அவ்வாறு தூக்கப்பட்ட போது கம்பிகளுடன் சேர்ந்து கிரேனும் கவிழ்ந்தது. குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டு இருந்த பேருந்தின் மீது கிரேனால் தூக்கப்பட்ட இரும்புக்கம்பி விழுந்ததால் பேருந்தின் முன் பகுது முற்றிலும் சேதமடைந்தது.

ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்ற பேருந்து என்பதால் போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர். இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe