Advertisment

லோடு ஆட்டோ கவிழ்ந்து விபத்து... இரண்டு பெண்கள் பலி

இராணிப்பேட்டை மாவட்டம்அரக்கோணம் அருகே நெமிலி தாலுக்காவில் உள்ளது சிறுவளையம் கிராமம். இந்த கிராமத்தைச்சேர்ந்த ஒருவரின் திருமணத்துக்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் ஓரு லோடு ஆட்டோவில் அரக்கோணம் நோக்கி வந்தனர்.

Advertisment

accident incident in ranipettai

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அப்படி வந்த ஆட்டோ குண்டும் குழியுமான சாலையால் நிலைதடுமாறியது. சாலையிலிருந்து இறங்கி நிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் தக்கோலம் அடுத்த கீச்செரி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான கவிதா மற்றும் 40 வயதான சமாதானம் ஆகிய இருபெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோவில் இருந்த 12 பேர் படுகாயம்மடைந்தனர். அதில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அவர்கள் உடனடியாக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.சிலர் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நெமிலி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

accident police ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe