Advertisment

தாறுமாறாக சென்ற மாநகர பேருந்து... ஓட்டுனர் மாரடைப்பால் உயிரிழப்பு... 

கோயம்பேட்டிலிருந்து மகாபலிபுரம் செல்லும் 570 என்ற வழித்தடம் கொண்ட பேருந்து வேளச்சேரிநூறடி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாறிய ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்ற முற்பட்டுள்ளார். அப்போது தடுமாறிய பேருந்து சாலையில் இருந்த கார்கள் மீது தாறுமாறாக மோதி நின்றது.

Advertisment

accident

k

பேருந்து ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை சுதாரித்துக்கொண்டபயணிகள் அவரை அருகில் உள்ள ஆட்டோவில் ஏற்றினர். ஆட்டோவில்ஏற்றும்பொழுதே ஓட்டுநர் ராஜேஷ்கண்ணா சுயநினைவின்றி இருந்த நிலையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாஏற்கனவேஉயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Advertisment

இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, பேருந்து தாறுமாறாக மோதியதில் கார்கள் மட்டும் சேதமடைந்தன. நடு சாலையில் ஓட்டுனருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தசம்பவம் அங்குபரபரப்பை ஏற்படுத்தியது.

bus bus driver Chennai heart attack Transport
இதையும் படியுங்கள்
Subscribe