Advertisment

கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

An accident that happened in the blink of an eye; A sensational CCTV footage of a woman walking on the road being thrown away

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சாலை ஓரம் நடந்து கொண்டிருந்த பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மோதி தூக்கி வீசி செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த லீலாவதி என்பவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலை ஓரமாக லீலாவதி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் வந்த கார் ஒன்றின் மீது மோதிய மற்றொரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் புகுந்தது. அப்போது நடந்து சென்று கொண்டிருந்த லீலாவதி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லீலாவதியைஉடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Advertisment

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

kovai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe