Accident at funeral! Explosion that made person to passed

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ளது அனுமனந்தல் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் சன்னியாசி (35). இவர் அதே ஊரில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் தண்ணீர்தொட்டி ஆப்பரேட்டராக இருந்துவருகிறார். அதே ஊரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மனைவி முத்தம்மாள் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (04.07.2021) உயிரிழந்துள்ளார்.

Advertisment

அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. அப்போது ஆப்பரேட்டர் சன்னியாசி சவ ஊர்வலத்தில் வான வெடியைப் பற்றவைத்து ஆகாயத்தில்விட்டு வெடித்தபடி சென்றுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக தீப்பொறி அவரது கையில் வைத்திருந்த வெடியில் பட்டு, வெடிகள் வெடித்துச் சிதறின. இந்த விபத்தில் சன்னியாசி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

Advertisment

அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்துபோனவர் இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்தபோது அந்த வெடி, வெடித்தவர் உயிரையே பதம் பார்த்துள்ளது. இந்தச் சம்பவம் அனுமனந்தல் கிராம மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.