Skip to main content

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விபத்து!

Published on 08/03/2020 | Edited on 08/03/2020

மதுரை செல்லூர் பகுதியில் ஸ்மார்ட்சிட்டி  திட்டத்தின் கீழ் ஆங்காங்கே போக்குவரத்திற்கு நடுவில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. மதுரையின் சிறப்பை குறிக்கும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டும் வருகிறது.

 

 Accident at a function attended by Minister Selur Raju in Madurai


அதில் ஒன்று மதுரை செல்லூரில் கபடி வீரர்கள் அடங்கிய சிலையோடு சேர்த்து அமைந்துள்ள ரவுண்டானாவை திறந்து வைக்க அமைச்சர் செல்லூர் ராஜூ  வந்திருந்து பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென கிரானைட் கற்கள் பதித்த பகுதிகள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் ஆளும் கட்சியை சேர்ந்த அதிமுக தொண்டர்கள்  அருகிலிருந்த சாக்கடையில் விழுந்தனர். இதில் அமைச்சரும் நிலை தடுமாற அவரை அங்கிருந்த போலீசார் கைத்தாங்கலாக காப்பாற்றினர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 Accident at a function attended by Minister Selur Raju in Madurai


ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி பல்வேறு  கட்டிட வேலைகளை  செய்து வருகின்றன.  இதை எடுத்த காண்ட்ராக்டர்களின்  தரமற்ற வேலைப்பாடுகளால் இதுபோன்று நடந்து உள்ளது. இதில் ஆளும் தரப்பின் அமைச்சர் திறந்து வைக்கும் போதே நடந்த இந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''வைட்டமின் டி வேணாமா? வெயிலுக்கு வாங்க...''-செல்லூர் ராஜு கலகலப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 "Don't you want vitamin D.. to get sun..."-Sellur Raju Kalakalappu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இந்தநிலையில் மதுரையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த அவர், வெயிலுக்காக பயந்து ஓரமாக நின்றிருந்த கட்சி நிர்வாகிகளைப் பார்த்துப் பேசுகையில், ''நாங்க எல்லாம் வெயிலில் இருக்கிறோம். நீங்கள் மட்டும் நிழலில் இருக்கலாமா... இதெல்லாம் நியாயமாப்பா... வாங்கப்பா உடம்புக்கு வெயில் நல்லதுமா. இந்த நேரத்துல வைட்டமின் டி கூடும். என்ன டாக்டர் ''எனச் சொல்ல, அருகில் இருந்த சரவணன் தலையை ஆட்டினார். அதன் பிறகு பேசிய செல்லூர் ராஜு, 'எம்.எஸ் படிச்ச டாக்டரே சொல்லிவிட்டார் வாங்க வெயிலுக்கு'' என்றார்.

அதே பரப்புரை கூட்டத்தில் கூட்டணியில் உள்ள பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ள இருந்தார். ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால் அதுவரை நடனமாடுங்கள் எனச் செல்லூர் ராஜு சொல்லிவிட்டார். உடனே 'கள்ளழகர் வாராரு' பாடல் போடப்பட்டது. அங்கிருந்த பெண்கள் உற்சாகமாக நடனமாடினர்.

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.