/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kavitha_2.jpg)
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதன்காரணமாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. மேலும், மழை பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மரம் வேரோடு சாய்ந்ததில் பாதுகாப்பு பணியில் இருந்த கவிதா என்ற பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)