Accident at the  explosives manufacturing site in Pudukottai

நேற்று கிருஷ்ணகிரியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் புதுக்கோட்டையில் நாட்டு வெடி தயாரிக்கும் இடத்தில் வெடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அடுத்துள்ள பூங்கொடி கிராமத்தில் நாட்டு வெடிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த வைரமணி என்பவர் இந்த ஆலையை நடத்திவந்தார். இந்நிலையில் இன்று ஐந்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மேலே சென்று கொண்டிருந்த உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து கிளம்பிய தீப்பொறியானது அடிக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிப்பொருட்கள் மீது பட்டது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில்தொழிற்சாலை தரை மட்டமானது. உள்ளே மாட்டிக்கொண்ட ஐந்து பேரும் உடல் கருகிய நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஐந்து பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

Advertisment