
சென்னை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி மற்றும் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்ததுசோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் இருந்து தனசேகரன் என்பவர் மாமல்லபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தனசேகரன் உடன் அவருடைய மனைவி, ஆறு வயது மகன் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தில்மோதியது. இதில் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் சென்றமூன்று பேரும் கீழே விழுந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே கணவன் மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
6 வயது சிறுவன் மீட்கப்பட்டு 108 வாகனத்தின் மூலமாக அருகில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்ற நிலையில், செல்லும் வழியிலேயே ஆறு வயது சிறுவனும் உயிரிழந்தான். இது குறித்து காரை ஓட்டி வந்த நபரை விசாரித்த பொழுது, அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த வினைபாபு என்பது தெரிய வந்தது. அதிவேகமாக கார் வந்ததால் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னே சென்ற தனசேகரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது தெரியவந்தது. மேலும் கார் அருகில் உள்ள பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்து தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)