Advertisment

சிலிண்டர் குடோனில் பெரும்விபத்து... காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

Accident in cylinder godown...Commotion near Kanchipuram

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறிய நிலையில், இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலிண்டர் குடோன் ஒன்று இயங்கி வந்தது. இங்கிருந்து சிலிண்டர்கள் கிராம பகுதிகளுக்கும், நகர பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென அங்கு நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் எட்டு பேர் நூறு சதவிகித தீக்காயம் அடைந்தனர். மொத்தம் 20 பேருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சென்று உள்ளே சிக்கி இருந்த ஊழியர்களைமீட்கும் பணியில் இறங்கினர்.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சிலிண்டர்கள் வெடித்து சிதறுவதால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சிலிண்டர் குடோனில் ஏற்பட்ட இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

fire incident kanjipuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe