Advertisment

காட்டுப்பன்றியால் நிகழ்ந்த விபத்து; ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

An accident caused by a wild boar; Auto driver fatality

கமுதி அருகே சாலையின் குறுக்கே திடீரென காட்டுப்பன்றிகள் ஓடியதால் மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது என்பவர் வழக்கம்போல் இன்று காலை 10க்கும் மேற்பட்ட மாணவமாணவிகளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கமுதி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பெருமாள்தேவன்பட்டி என்ற பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்த போது திடீரென காட்டுப்பன்றிகள் சாலையின்குறுக்கில் ஓடியதாகக் கூறப்படுகிறது. அப்பொழுது நிலைதடுமாறி ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisment

இதில் ஆட்டோ ஓட்டுநர் நல்லமருது உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த மாணவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 3 மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

kamuthi Ramanathapuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe