Advertisment

கார் பந்தயத்தில் விபத்து; ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு

An accident in a car race; Hotel owner lost their live

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் பந்தயத்தில் ஈடுபட்ட கார் பந்தய ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

Advertisment

சென்னையைச்சேர்ந்த தனியார் உணவகத்தின் உரிமையாளர் குமார். இவர் கார் ரேஸ் மீது கொண்ட ஈடுபாடு காரணமாகத்தொடர்ச்சியாக கார் பந்தயங்களில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கார் பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்தப் பந்தயத்தில் எதிர்பாராத விதமாக அவர் ஓட்டிச் சென்ற காரானது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குமார்மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisment

hotel sriperumputhur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe