விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சக்கரவர்த்தி(49). இவர் ஆட்டு பட்டி வைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக காலை ஆடுகளை ஏரி மற்றும் வயல்வெளிபகுதிகளில் மேய்த்துவிட்டு மாலையளவில் வீட்டிற்கு ஆடுகளை ஓட்டி வந்தார். அப்போது அரசூர் பாரதி நகர் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் வேகமாக வந்து ஆடுகள் மீது மோதியது. கார் ஓட்டுநர் செல் போன் பேசிக்கொண்டு வந்ததால் விபத்து நடந்ததாக தெரிகிறது.

Advertisment

accident

கார் வேகமாக வந்ததால் காரின் உட்பகுதியில் 5 ஆடுகள் மாட்டிக் கொண்டு தொலைவில் சென்று கார் நின்றது. இதில் 40ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமாடைந்தன.

இதை அறிந்த பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதாகவும் விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்றும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் கோரி இறந்த ஆடுகளைசாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.