Advertisment

திருமயம் விபத்தில் இறந்த 10 பேர் சடலம் தெலுங்கானா அனுப்பி வைக்கப்பட்டது

c

தெலுங்கானாவில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு சென்ற ஐயப்ப பக்தர்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வழியில் ராமேஸ்வரம் சென்று தரிசனம் செய்து விட்டு புதுக்கோட்டை நோக்கி சென்ற போது திருமயத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 9 ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா வேன் ஒட்டுனர் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலே யே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயத்துடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் தகவல் அறிந்து வந்த அமைச்சர் விஜயபாஸ்கர் இறந்தவர்களின் உடல்கள் தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Advertisment

விபத்து சம்பவம் அறிந்து தெலுங்கானா அரசு அதிகாரிகள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் ஒரு வேனில் வந்திருந்தனர். இன்று 10 உடல்களும் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவர்களின் உறவினர்களுடன் தெலுங்கானா அனுப்பி வைக்கப்பட்டது.

Ambulance
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe