வேலூருக்கு நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து மனுதாக்கல் முடிவுபெற்று தற்போது வேட்புமனு மறுபரிசீலனை நடைபெற்றுவருகிறது. இந்த தேர்தலில் வேலூரில் திமுக, அதிமுக, நாம் தமிழனர் கட்சி என மும்முனை போட்டி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் டிடிவியின் அமமுக, கமலின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.

Advertisment

 AC Shanmugam, Kadir Anand's nomination stopped

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏசி.சண்முகம் புதிய நீதி கட்சி என தனி கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி அவர் இரட்டை இலையில் போட்டியிடலாம் என கேள்வி எழுப்பட்டதையடுத்து அவரது வேட்புமனு மறுபரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தற்போது திமுக சார்பில் போட்டியிடும் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தின் வேட்புமனு மீதான மறுபரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் ஒருவர்,கதிர் ஆனந்தின் மீது தேர்தல் பணப்பட்டுவாடா செய்ததாகவும், அவருக்கு வேண்டியவர்களின் குடோனில் கோடி கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது என குற்றம்சாட்ட அவரது வேட்புமனு மீதான மறுபரிசீலனையும் நிறுத்தப்பட்டுள்ளது.