Skip to main content

பணத்தை வெளியே எடுக்காத அமைச்சர்கள் – திடீரென பின்வாங்கிய ஏ.சி.சண்முகம்

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 


வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களத்தில் பணம் தண்ணீராக செலவழிக் கப்படுகிறது. அதிலும் திமுகவை விட அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அதிமுகவினர், பாமகவினர், தேமுதிகவினர், பாஜகவினருக்காக தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள் என்கிற குரல்கள் தேர்தல் களத்தில் பேசப்பட்டன.

 

ac


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே கட்சி நிர்வாகிகளுக்கு தனியே செலவு, பூத் செலவுக்கு தனியே தினமும் ஒரு தொகை என வாரி வழங்கி வந்தார் ஏ.சி.சண்முகம். அதோடு பிரச்சாரத்துக்கான செலவு தனி.


கடந்த 23ந்தேதி தேர்தல் பிரச்சாரத்துக்காக அதிமுக தலைமை கழகம் அறிவித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் 209 பொறுப்பாளர்கள் தலைமையில் அதிமுகவினர் வேலூர் வந்து இறங்கிய சில நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக புலம்புகிறார்கள் நிர்வாகிகள்.


இதுப்பற்றி பேசும் அதிமுகவினர், வெளியூர் கட்சியினர் வருவதற்கு முன்பு கட்சிக்காரர்களின் செலவுக்கு தினமும் 10 ஆயிரம் என தந்தார்கள். அமைச்சர்கள் உட்பட தேர்தல் பொறுப்பாளர்கள் வந்தபின், அதுவும் குறிப்பாக முதல்வர் எடப்பாடி வந்து சென்றபின் எதுவுமே தரவில்லை. கேட்டால், பணம் வரவேண்டிய இடத்தில் இருந்து வரவில்லை எனச்சொல்கிறார்கள்.


ஒரு தொகுதிக்கு 5 அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தாலும் அவருக்காக நாம எதுக்கு செலவு செய்யனும்னு ஒருவரும் தங்களது பாக்கெட்டில் இருந்து எடுத்து செலவு செய்யவில்லை. தங்களது செலவை மட்டுமே பார்த்துக்கொள்கிறார்கள். ஏ.சி.எஸ் தரப்பில் இருந்து பணம் வந்தால் மட்டுமே செலவு செய்கிறார்கள். அவுங்களே செலவு செய்யல, நாங்க மட்டும் எதுக்கு செலவு செய்யனும்னு அடுத்த கட்ட நிர்வாகிகளும் செலவிடவில்லை என புலம்புகிறார்கள்.


திடீரென ஏ.சி.எஸ் தரப்பு, கீழ்மட்ட நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்களுக்கு தினசரி செலவுக்கு கூட தந்தப்பணத்தை நிறுத்தியது ஏன் எனத்தெரியாமல் உள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக, அதிமுக யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும்?-ஏ.சி.சண்முகம் கேள்வி

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Whom will DMK and AIADMK propose as Prime Minister candidate and ask for votes?-AC Shanmugam Question

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேவலாபுரம் பகுதியில் புதிய நீதி கட்சி சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1000 க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் இருந்து செல்லும் எம்பிக்கள் மக்களுக்கு கொண்டு வரவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் 60 சதவீத திட்டப் பணிகள் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் கமிஷனாகவே சென்று விடுகிறது. 40 சதவீத பணிகள் மட்டுமே மக்களுக்கு திட்டங்களாக சென்றடைகிறது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக யாரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வாக்கு கேட்பார்கள்? இந்தியா பொருளாதாரத்தில் உலக நாடுகளில் 5 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும். ரஷ்யா ராணுவத்திலும், அணுமின் நிலையத்திலும் முன்னோடியாக திகழ்ந்தாலும், சாலைகள் மேம்பாலங்கள் உள்ளிட்ட கட்டமைப்பில் ரஷ்யாவை காட்டிலும் இந்தியா முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது'' என்றார்.

Next Story

'ஜன.,3 ஆம் தேதி குரூப் 1 முதல்நிலை தேர்வு' - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

tnpsc has been announced group 1 preliminary exam date

 

கடந்த ஏப்ரல் மாதம் 5, 25, 26- ஆம் தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 முதல்நிலைத் தேர்வுகளுக்கான தேதியை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி)


இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், "69 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத்தேர்வு 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3- ஆம் தேதி முற்பகலில் நடைபெறும். குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் பதவிக்கான (12 காலிப்பணியிடங்கள்) தேர்வு 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9, 10- ஆம் தேதிகளில் நடைபெறும்" எனத் தெரிவித்துள்ளது.