ADVERTISEMENT

திருவண்ணாமலை தீபத் திருவிழா; வெளியூர் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

11:43 PM Nov 20, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் ஏ.சி படுக்கை வசதிக் கொண்ட பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் பெருவிழா கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், வெளியூரில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, "திருவண்ணாமலை தீபத் திருவிழாவை காண வரும் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்து கழம் சார்பில் ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படும். நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, கோவை ஆகிய இடங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு வரும் நவம்பர் 24, 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 25, 26, 27 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும் 50 ஏ.சி.பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT