Advertisment

நேற்று முன்தினம் நடந்த ஏசி விபத்து விபத்தல்ல... திட்டமிட்ட கொலை... விசாரணையில் தகவல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்புராய பிள்ளை நகரில் வசித்து வந்தவர் கிருஷ்ணன் நேற்று முன்தினம்அதிகாலை இவரது வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த ஏசி. மெஷின் வெடித்தது.இந்த சம்பவத்தில்கிருஷ்ணன் (60 வயது) அவரது மனைவி கலா 52 வயது, அவரது மகன் 24 வயது கெளதமன் ஆகிய மூவரும் இறந்தனர்.

Advertisment

 AC accident that occurred yesterday before was not an accident...Planned incident....

ஏசி மெஷின் வெடிப்பு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துவிட்டு போலீஸ் மற்றும் தீயணைப்புதுறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மூன்று உடல்களையும் மீட்ட போலீசார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது மகன் கெளதமனுக்கு விரைவில் திருமணம் நடைபெறஇருக்கவிருந்தநிலையில்இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்களது மூத்த மகனிடம் நடத்திய விசாரணையில்முதல்கட்டமாகஇது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என போலீசார்கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த திட்டமிட்ட கொலையின் பின்னணயில்அவர் மட்டும்தான் இருக்கிறாரா அல்லது கூட்டு சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலைக்கான காரணம் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்கிறது போலீஸ் வட்டாரம். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Viluppuram police murder accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe