கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது பெண். திருமணமான இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Advertisment

தற்போது அந்த பெண் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இரவு அந்த பெண் தனது கணவருடன் கடலூரில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் நள்ளிரவில் படம் முடிந்ததும் கணவருடன் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

abuse to pregnant woman...! 4 youths arrested

அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் தம்பதியை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியது. அதையடுத்து மர்மகும்பல் அந்த பெண்ணை காரில் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றது. அங்கு வைத்து 3 பேரும் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.

Advertisment

பின்னர் அந்த பெண்ணை மீண்டும் காரில் அழைத்துக் கொண்டு வீட்டின் அருகில் விட்டு சென்றனர். இதுகுறித்து அந்த பெண் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட திருப்பாதிரிப்புலியூா் மாா்க்கெட் காலனியை சோ்ந்த ராமு மகன் பிரசாத் (23), காட்டுராஜா மகன் ஆட்டோ ஓட்டுநா் நாகமுத்து (23), குமாா் மகன் பிரபாகரன் (23), இந்திரா நகரைச் சோ்ந்த அரிகிருஷ்ணன் மகன் முனுசாமி (23) ஆகியோரை

கைது செய்து சிறையிலடைத்தனர். கணவரை தாக்கி விட்டு கர்ப்பிணியை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.