Skip to main content

சத்துணவு உதவியாளர் நியமனத்தில் முறைகேடு; மண்ணெண்னை கேனுடன் விதவை பெண் போராட்டம்

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
lady

 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமேனி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். இதனை தொடர்ந்து இவரது மனைவி வேம்பரசி(37) மகன் சத்தியபிரியன்(3) அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் உள்ள சத்துணவு உதவியாளர் பணிக்கு விதவை ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியரின உத்திரவின் பேரில் இவரை நேர்முக தேர்வில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

 தேர்வில் வெற்றிபெற்று பணிக்காக காத்திருந்தபோது இறுதி பட்டியலில் இவரது பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் புவனகிரி வட்டாரவளர்ச்சி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டுள்ளார். சரியான பதில் இல்லாததால் வேதனையடைந்து அவரது மகனுடன் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மண்ணெண்னை கேனுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையறிந்த புவனகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை சமாதனம் செய்து அனுப்பிவைத்தனர்.

 

இது குறித்து வேம்பரசி கூறுகையில், நான் நேர்முக தேர்வுக்கு சென்று வந்ததிலிருந்து அதிமுக  ஒன்றிய செயலாளர், இந்த வேலைக்கு ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தால் தான் வேலை கிடைக்கும என்றார். என்னால் அவ்வளவு பணம் கொடுக்கமுடியாது என்று கூறியுடன் ஒரு லட்சமாவது கொடுக்க வேண்டும் என்றார். என்னால் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டேன். அதனால் ஆத்திரமடைந்தவர், நீ எப்படி வேலை வாங்கிடுவ என்று பார்கிறேன் என கூறி எனக்கு கிடைக்க வேண்டிய வேலையை மற்றவர்களுக்கு மாற்றிவிட்டார். நான் விதவை உதவிதொகை பெற்று குடும்பத்தை நடத்தி வருகிறேன். எங்களுக்கென்று யாரும் இல்லை.  இந்தவேலை கிடைக்கவில்லையென்றால் நானும் எனது மகனும் இதே இடத்தில் மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்வோம் என்றார்.  

 

சத்துணவு பொறுப்பாளர், உதவியாளர் உள்ளிட்டவர்களின் பணி நியமனத்தில் இதற்கு முன் இருந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே அதிமுகவை சேர்ந்தவர்கள் கொடுக்கும் பட்டியலை நிராகரித்ததால் 6 மாதத்திலே அவரை பணிமாற்றம் செய்துவிட்டனர் அதிமுகவினர் என்பது குறிப்பிடதக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மறுமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு...” - ஜார்க்கண்ட் அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Jharkhand government issued an important notification For women remarrying

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி  பதவியேற்று பொறுப்பு வகித்து வருகிறார். 

சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, ஜார்க்கண்ட் மாநில அரசு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று (06-03-24) சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார் பேசியதாவது, “நம் சமூகத்தில் விதவை பெண்கள், கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதில்லை. கணவனை இழந்த விதவைகள் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதவை பெண்கள், தங்கள் திருமணப் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணம் செய்து கொள்ளும் எந்த விதவை பெண்களும், திருமணமான ஒரு வருடத்திற்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.  

Next Story

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Appointment of new members to TNPSC

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வாணையம் ஒரு தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்ற சட்ட விதிப்படி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு 5 புதிய உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.பி. சிவனருள், முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி ஆர். சரவணகுமார், சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஏ.தவமணி, சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டி பாபு தெருவைச் சேர்ந்த உஷா, கோவை ஸ்ரீநாராயணகுரு மேலாண்மை கல்வி நிறுவனத்தின் முதல்வர் முனைவர் ஆர். பிரேம்குமார் ஆகியோர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.