காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது மேல ராதாம்பூர். இந்தபகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (17). இவர் அதேபகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள நடுகஞ்சன்கொல்லையை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்தநிலையில் மாதவன் தனது நண்பர்களான நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ராமலிங்கம் மகன் விக்னேஷ்வரன்(19), ராமச்சந்திரன் மகன் சூர்யபிரகாஷ்(21) ஆகியோரிடம் தான் நடுகஞ்சன்கொல்லையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறியுள்ளார். கடந்த 8 மாதத்துக்கு முன்பு மாதவன் அவரது காதலியை அதே பகுதியில் உள்ள வடவாற்றுக்கரைக்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபோல மாதவன் பல முறை காதலியுடன் உல்லசாமாக இருந்துள்ளார்.
மாதவன் இதுகுறித்து அவரது நண்பர்களான விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகியோரிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் கடந்த 06.10.2019அன்று மாதவனின் காதலி ஊர் அருகே உள்ள வீரன் கோவில் பகுதியில் தனிமையில் நின்றுள்ளார். அப்போது அங்கு சென்ற சூரியபிரகாஷ் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 13.10.2019 அன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்த போது அங்கு சென்ற விக்னேஷ்வரன் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(12ம் தேதி) சிறுமிக்கு வயிற்று வலி வந்து துடித்துள்ளார். அவரை அவரது சகோதரர் வீரப்பன் அவரை கட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிறுமி நடந்த உண்மைகளை சகேதரர் வீரப்பனிடம் கூறி அழுதுள்ளார்.
இது குறித்து நேற்று முன்தினம் சிறுமியின் சகோதரர் வீரப்பன் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆக்னேஸ்மேரி, சப்-இன்ஸ்பெக்டர் திரிபுரசுந்தரி மற்றும் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய் குற்றவாளிகளை பிடிக்க சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ஜவஹர்லால் தலைமையில் தனிப்படை அடைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நேற்று மாதவன், அவரது நண்பர்கள் விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன், சூர்யபிரகாஷ் ஆகிய 2 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள்.
சிறுமியை மிரட்டி மாணவர்கள் பாலியல் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.