/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/13_161.jpg)
அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வல்லம் படுகை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய வழக்கில் கரூர் சிவானந்தா தெருவைச் சேர்ந்த அழகப்பன் மகன் மகாலிங்கம் (60) என்பவர் கைது செய்யப்பட்டு, பின் தலைமறைவானார்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவு குற்றவாளியான மகாலிங்கத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப் இன்ஸ்பெக்டர் லெனின் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமைக் காவலர் ஜெகதீசன், காவலர்கள் இளவரசி, மணிகண்டன் ஆகியோர் கரூரில் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் பேரில் அவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பத்தாண்டுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளைப் பிடித்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)