Advertisment

“மாயமான மணமகள்; திரும்ப கிடைத்ததும் குடும்பத்தினர் கலக்கம்"!

publive-image

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவை அடுத்த வசந்தநடை கிராமத்தை சேர்ந்தவர் நாகையன் என்கின்ற நாகராஜன். இவரது மகள் 19 வயதுடைய சத்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அவருடைய தாய்மாமாவுக்கும் கடந்த 20 ஆம் தேதி பள்ளிக்கொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் கிராமத்திலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்பாக கடந்த 19 ஆம் தேதி அதிகாலை 10 பவுன் நகையுடன் சத்யா மாயமாகி்விட்டார்.

Advertisment

இதனால் அதிர்ச்சியான பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லையென பள்ளிகொண்டா காவல்நிலையத்தில் நாகராஜன் புகார் கொடுத்தார். வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் விசாரணை நடத்திய போலீஸார், ‘பெண்ணுக்கு கல்யாணத்தில் விருப்பம் இருந்திருக்காது, யாரையோ காதலிச்சிருக்கும், அவனோட காணாமபோயிருக்கு, அதுவா வரும் அப்போ விசாரிச்சிக்கலாம் போ’ என கிடப்பில் போட்டுவைத்துள்ளனர். மாயமான சத்யா ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு இளைஞனுடன் காவல்நிலையத்துக்கு வந்துள்ளார். சத்யா கழுத்தில் புதுத்தாலி தொங்கிக்கொண்டு இருந்துள்ளது.

Advertisment

அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, “நான் விரிஞ்சிபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்போது கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை காதலித்து வந்தேன். எங்கள் காதலை தெரிந்துக்கொண்டு அவசரம் அவசரமாக என் விருப்பத்தை மீறி ராணுவ வீரரான எனது தாய்மாமாவுக்கு கடந்த 20 ஆம் தேதி திருமணம் செய்ய இருந்தனர். இதனால் அதிகாலை 3 மணிக்கு எனது காதலன் தினேஷ்குமாரை வரவழைத்து அவருடன் சென்னைக்கு சென்றோம்.

அங்கு எங்களது நண்பர்கள் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து வைத்தார்கள்” என்று சத்யா கூறி உள்ளார். இருவரின் பெற்றோரையும் வரவழைத்து சமாதானம் செய்து, திருமண ஜோடிகளுக்கு தொந்தரவு யாரும் தரக்கூடாது என எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவைத்தனர்.

love affair Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe