சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (09.02.2023) கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன் தலைமையில் சென்னை அமெரிக்கத் தூதரகம் பொருளியல் மற்றும் அரசியல் பிரிவு தலைமை அலுவலர் விர்சா பெர்கின்ஸ், தொழிலாளர் ஆணைய முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.