/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/651.jpg)
சுந்தரத்துடன் ஏற்பட்ட கூடாநட்பை தொடருவதற்காக தனது இரண்டு குழந்தைகளை பாலில் விஷம் வைத்து கொலை செய்த அபிராமி, நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்ததோடு, சரியாக சாப்பிடாமல் அவ்வப்போது அழுது வருவாராம். சிறையில் அடைக்கப்பட்ட நாளிலிருந்து யாரிடமும் பேசாமல் ஒரு விரத்தியில் இருந்துள்ளார். நான்கு நாட்களாக சாப்பிடாமல் இருந்ததால் உடல் சோர்வு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உடனடியாக சக கைதிகள் தகவல் அளித்தன் பேரில் காவலர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவரை சாப்பிட வைத்தனர். தற்போது சக கைதிகளிடம லேசாக பேசி வருகிறாராம். சிலரிடம் தனது நிலைமையை சொல்லி அழுதுள்ளார்.
தனது கணவர் நல்லவர், தான் எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார். நன்றாக கவனித்து வந்தார். அவருக்கு துரோகம் செய்துவிட்டேன். பிரியாணி கடையில் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டவுடன் அவனது பேச்சில் மயங்கி, எல்லாவற்றையும் இழந்து நிற்கிறேன். எனது வாழ்க்கையே நாசமாகிவிட்டது என அழுதுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)