உண்டியல் சேமிப்பு பணத்தில் மக்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கிய அரசுப் பள்ளி மாணவிக்கு மிரட்டலா?

a

அரியலூர் மாவட்டத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜனவரி 1 அன்று விபத்தில் தனது தகப்பனாரை இழந்து வறுமையில் வாடிய போதும் தனது சொந்த ஊரான குந்தபுரம் கிராம மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் தொலைநோக்குசிந்தனையுடன் பொதுமக்களின் நலன் கருதி தனது 5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தை செலவு செய்து மூலிகை குடிநீரை வழங்கினார் ஆறாம் வகுப்பு மாணவி அபி.இந்த அரிய செயலை அறிந்த பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாணவி அபிஅரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.அதில்,திருமானூர் காவல்நிலைய சிஐடி பழனிசாமி செல்போனில் தொடர்பு கொண்டுமிரட்டிய சம்பவம் சமூக சிந்தனையுடையவர்களின் மனதை காயப்படுத்துவதாய் உள்ளது.

இவருடைய இந்த மனிதநேயமற்ற செயலை கண்டித்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்என தனது மனவேதனையை மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு கடித வடிவில் அனுப்பியுள்ளார்.

Ariyalur corona school student
இதையும் படியுங்கள்
Subscribe