
பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுவீழ்த்தப்பட்டு விபத்துக்குள்ளான இந்திய போர் விமானத்தில் இருந்த விமானி அபிநந்தன் சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம் யஸ்வந்த் நகர் ஜெல்வாய் விஹார் விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவரின் பூர்வீகம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுவெம்பாக்கத்தைஅடுத்த திருபனைமூர், அவரது தந்தை வரதமன் அவரும் விமானப்படையிலேயே பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது தாய் மல்லிகா இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது தாத்தாவும் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது பள்ளிப்படிப்பை வடமாநிலத்தில் உள்ள விமானப்படை பள்ளியில் படித்தவர்.கடந்த 2004-ல் தாம்பரம் விமானப்படை பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்று தற்போது தனது மனைவி குழந்தைகளுடன் டெல்லியில் உள்ள விமானப்படை குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.
பாக்.ராணுவத்தில் சிக்கிக்கொண்ட அவருக்காக தாம்பரத்தில் ஜெயின் கோவிலில் அவரது உறவினர்கள் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)