Advertisment

வேங்கைவயல் குடிநீர் தொட்டிக்கு ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கினார் அப்துல்லா எம்.பி

Abdullah MP allocated Rs for vengavayal

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், அங்கு சென்ற அமைச்சர் மெய்யநாதன் 20 நாட்களில் புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும் என்றார்.அதேபோல சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடிநீர் குழாய், புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியை அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தீவிரமாக செய்து வந்தனர்.

Advertisment

vv

இந்தநிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா புதிய நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைக்க தனது நிதியிலிருந்து ரூ. 9 லட்சம்ஒதுக்கீடு செய்துள்ளார். புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிப் பணிகளும்வேகமெடுத்துள்ளன.

Advertisment

Pudukottai Untouchability
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe