முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். அப்துல் கலாமின் சகோதரர் முத்துமீரானிடம் நடிகர் கமல்ஹாசன் ஆசி பெற்றார். அப்துல்கலாமின் அண்ணன் முத்துமீரான் மரைக்காயர், கமலுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், அப்துல் கலாம் படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை கமலிடம் அளித்தார் கலாமின் பேரன் சலீம்.
-நாகேந்திரன்