காணாமல்போன பச்சிளம் குழந்தை.... 3 மணி நேரத்தில் மீட்ட போலீசார்!

Abducted baby  rescued by police in 3 hours!

சென்னை கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக போலீசார் பல்வேறு இடங்களில் குழந்தையைத் தேடி வந்த நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மைசூருக்கு செல்ல இருந்த ரயிலில்காணாமல் போன குழந்தையுடன் ஒருதம்பதியினர் இருந்தனர். அவர்கள் அந்த குழந்தையைகடத்திச் செல்ல முயன்றனர். அப்பொழுது அவர்களை கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடமிருந்து குழந்தையை பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவைச் சேர்ந்த அந்த தம்பதியிடமிருந்து குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை 10 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் மதியம் 1.30 மணிக்கு குழந்தை மீட்கப்பட்டது அனைவரிடமும் பாராட்டைப்பெற்றுள்ளது. மேலும் அந்த தம்பதியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

baby Chennai police rescued
இதையும் படியுங்கள்
Subscribe