Advertisment

திருச்சியில் 15 திரையரங்குகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" வெளியீடு!

இன்று முதல் திருச்சியில் 15 திரையரங்குகளில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" திரையிடப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை நவம்பர் 10 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. தங்களது ஹீரோக்களின் புது படங்கள் எப்போது தியேட்டர்களுக்கு வரும் என தியேட்டர் உரிமையாளர்களும், ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இன்று முதல் 50 சதவீத இருக்கைகள், அறிவிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி தியேட்டர்கள் செயல் பட ஆரம்பித்து உள்ளது.

Advertisment

மக்களுடைய பொழுதுபோக்கு ஆர்வத்தை கருத்தில் கொண்டு திரையரங்கு உரிமையாளர்கள் பழைய வெற்றிப் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் உள்ளிட்ட 15 திரையரங்குகளில் மறைந்த தமிழக முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த "ஆயிரத்தில் ஒருவன்" என்ற வெற்றிப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதிலும் குளிர்சாதனம் பயன்படுத்தும் திரையரங்குகள் திறக்கபடாமல், குளிர்சாதனங்கள் பயன்படுத்தாத திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.விரைவில் அனைத்து திரையங்குகளும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

open film cinema THEATERS trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe