Advertisment

ஆவின் இனிப்புகள் விலை உயர்வு அமலுக்கு வந்தது

aavin sweets price hike has come into effect!

தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தின் மேலும் சில பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆவின் இனிப்புகளின் விலை உயர்வு இன்று (16/09/2022) முதல் அமலுக்கு வந்துள்ளது. இனிப்புகளின் விலை உயர்வு குறித்த பட்டியலை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Advertisment

குலாப் ஜாமூன் 125 கிராம் 45 ரூபாயில் இருந்து ரூபாய் 50 ஆகவும், குலாப் ஜாமூன் 250 கிராம் 80 ரூபாயில் இருந்து ரூபாய் 100 ஆகவும், ரசகுல்லா 100 கிராம் 40 ரூபாயில் இருந்து ரூபாய் 45 ஆகவும், ரசகுல்லா 200 கிராம் 80 ரூபாயில் இருந்து 90 ரூபாய் ஆகவும், பிரீமியம் மில்க் கேக் 250 கிராம் 100 ரூபாயில் இருந்து ரூபாய் 120 ஆகவும், மைசூர்பா அரைகிலோ 230 ரூபாயில் இருந்து ரூபாய் 270 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

aavin sweets price hike has come into effect!

கோவா அரைகிலோ 210 ரூபாயில் இருந்து ரூபாய் 250 ஆகவும், ஸ்வீட்லஸ் கோவா ஒரு கிலோ 520 ரூபாயில் இருந்து ரூபாய் 600 ஆகவும், மில்க் பேடா250 கிராம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாய் ஆகவும், டேட்ஸ் கோவா அரைகிலோ 230 ரூபாயில் இருந்து ரூபாய் 270 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

sweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe