கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ, டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருட்களை ஆர்டர் செய்து பெறலாம் என்றும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஆவின் முகவர் நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.