ஆவின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை! நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!

தேனி ஆவின் நிர்வாக குழு தலைவர் ஓ.ராஜா தலைவராக செயல்பட விதிக்கப்பட்டத் தடையைநீக்கக்கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்தி வைத்துள்ளது.

aavin and o.raja issue

தேனிமாவட்டத்தில் உள்ள பழனி செட்டிபட்டி துவக்க பால் கூட்டுறவு சங்கத்தலைவர் அம்மாவாசை தாக்கல் செய்தமனுவில், மதுரை ஆவின் ஒன்றிய நிர்வாகத்தை மதுரை தேனி என தனியாக பிரித்து தமிழக அரசு கடந்த2019 ஆகஸ்ட் 22ல் அரசாணை பிறப்பித்தது. அதில் தேனி ஆவினை நிர்வகிக்க தலைவராக துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.-சின் தம்பி ஓ.ராஜாவும், துணைத்தலைவரகா செல்லமுத்துவும், 16 நிர்வாக குழுஉறுப்பினர்கள் இடைக்கால நிர்வாக குழுவாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 2ல்பொறுப்பேற்றனர்.

இதுகுறித்து ஆவின் ஒன்றிய உறுப்பினர்களுக்கு அறிவிப்பு செய்யவில்லை.கூட்டுறவு சங்கங்களில் சட்டப்படி ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாக குழுவை தேர்வு செய்யவேண்டும் அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை. சட்டவிரோதமாக இடைக்கால நிர்வாக குழுஅமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். தேனி ஆவினில்தலைவர் ஓ.ராஜா மற்றும் நிர்வாக குழு செயல்பட தடைவிதிக்க வேண்டும் என அம்மாவாசை தனது மனுவில்கூறி இருந்தார்.

அதை தொடர்ந்து தான் கடந்த 2019 செப்டம்பர் 12ல் நீதிபதிகள் அமர்வு ஓ.ராஜாதலைமையிலான நிர்வாக குழு செயல்பட இடைக்கால தடை விதித்தது. தேனி பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை துணை பதிவாளர் அன்றாட பணியை மேற்கொள்ள வேண்டும் எனஉத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தடையை விலக்க கோரி ஆவின் நிர்வாகம் மனு செய்தது. அதன்அடிப்படையில் நீதிபதிகள் துரைச்சாமி மற்றும் ரவீந்திரன் அமர்வு நீதிபதிகள் இந்த வழக்கைஜனவரி 20ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டுள்ளனர்.

Aavin's milk o.raja
இதையும் படியுங்கள்
Subscribe