ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்தது!

ஆவின் பாலின் விலையை தமிழக அரசு சமீபத்தில் உயர்த்தியது. அதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பவுடர் கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.320 ஆகவும், பால்கோவா கிலோ ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.520 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.460 லிருந்து ரூ.495 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தின் பன்னீர் ஒரு கிலோ ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

AAVIN ALL PRODUCTS PRICE RAISED

அரை லிட்டர் தயிர் ரூ. 25-ல் இருந்து ரூ.27 ஆகவும், வெண்ணெய் அரை கிலோ ரூ 230-ல் இருந்து ரூ.240 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 18- ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Aavin's milk higher price products Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe