ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுகவில் செஞ்சி ஏழுமலை என்பவரை நிறுத்தியுள்ளனர். இவர் கடந்த 5 ஆண்டு காலம் இதே ஆரணி தொகுதி எம்.பியாக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

Advertisment

இவரை சொந்த கட்சியினர் மற்றும் கூட்டணியில உள்ள பாமக, தேமுதிக, பாஜக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டம் ஆரணி நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு எங்களை முறையாக அழைக்கவில்லையென பாமக, தேமுதிக வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தை புறக்கணித்துவிட்டது.

ar

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளர் ஏழுமலை, கடந்த 5 ஆண்டு காலம் எம்.பியாக இருந்தேன். அப்போது நான் செய்த தவறுகள் ஏதாவது இருப்பின் என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் அப்படியொரு தவறு நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன், எனக்கு தேர்தல் வேலைப்பார்த்து வெற்றி பெற வையுங்கள் என கூடியிருந்த கட்சியினரிடம் கேட்டுக்கொண்டார்.

Advertisment

இதுப்பற்றி நம்மிடம் பேசிய அதிமுகவினர், இவர் எம்.பியா இருந்தாருன்னு இவர் சொன்னாதான் மக்களுக்கே தெரியும். அந்தளவுக்கு தான் இவருக்கும் தொகுதி மக்களுக்கும் தொடர்பிருந்தது. செஞ்சி, செய்யார் இந்த இரண்டு தொகுதியில் தான் இவரை எப்பவாவது பார்க்க முடியும். மத்தப்படி எந்த அரசு நிகழ்ச்சி, கட்சிக்காரன் வீட்டு விசேஷம், துக்கம் எதுக்கும் வறமாட்டார். இவரை வேட்பாளரா அறிவிச்சதுக்கு பதில் நாங்க, இந்த தொகுதியில நிக்கலன்னே சொல்லிட்டு போயிருக்கலாம். இவரை தொகுதிக்குள்ள அழைச்சிட்டுப் போனாளே மக்கள் விரட்டுவாங்க, என்ன செய்யறதுன்னே தெரியல என்றார்கள்