விழுப்புரம் ஆராயி மகன் கொலைவழக்கில் பெண் உட்பட இருவர் கைது

விழுப்புரம் திருக்கோவிலூர் அருகே வெள்ளம்புத்தூர் கிராமத்தில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி இரவு தூங்கிக்கொண்டிருந்த ஆராயி அவரது மகன் சமயன்,மகள் தனம் ஆகியோர் அடையளாம் தெரியாத நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். இதனால் ஆராயி மகன் சமயன் சம்பவதன்றேஉயிர் இழந்தார். ஆராயும் அவரது மகள் தனுமும் சுயநினைவற்றுபலத்த காயங்களுடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தமிழகத்தில்லுள்ள அனைத்துஅரசியல் தலைவர்கள்மற்றும் பொது மக்களிடையே பெரும் கண்டனத்தை பெற்ற இந்த செயலால் போலீசார் ஆறு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாகதேடிவந்தனர் .

murder

இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக, புவனகிரி அருகே தில்லைநாதன் என்பவரையும், அவனுக்கு உதவியதாக அம்பிகா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். கடலூரில் தில்லைநாதன் இதுபோல பல கொலை சம்பவங்களில் ஈடுபட்டவர் எனவும்அவர்மீது கடலூரில் இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்டவழக்குகள் உள்ளதாகவும் போலீசார் கூறினர். இதுபோன்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் உபயோகித்த ஆயுதங்களையும் போலீசார்பறிமுதல் செய்து கைப்பற்றினர்.

case murder Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe