Skip to main content

காவல் நிலையத்தில் 'திடீர்' துப்பாக்கிச் சத்தம்! - விசாரிக்க உத்தரவு!

Published on 03/03/2021 | Edited on 03/03/2021
S.P. who ordered the inquiry Sudden gunfire at the police station
                                                                 மாதிரி படம்

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் காவல் நிலையம் சென்னை – பெங்களுரூ தேசிய நான்கு வழிசாலையில் உள்ளது. எப்போதும் பரபரப்பாக உள்ள அந்தப் பகுதியில் நிறைய வர்த்தகக் கடைகள் உள்ளன.

 

மார்ச் 2 ஆம் தேதி இரவு, திடீரென காவல் நிலையத்துக்குள் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு அந்தப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயந்துபோயுள்ளனர். இதனால் பலரும் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். இதுபற்றிய தகவல் உடனடியாக ஆம்பூர் டி.எஸ்.பி, திருப்பத்தூர் எஸ்.பிக்கு கிடைத்துள்ளது. காவல் நிலையத்தில் நடந்தது என்னவென விசாரிக்க டி.எஸ்.பிக்கு உத்தரவிடப்பட்டது. 

 

அதன்படி நடந்த விசாரணையில், ஷிஃப்ட் பணி முடிந்து பணி ஏற்றுக்கொள்ள வந்த உதவி ஆய்வாளர் பழனியின், 5 சுற்று கொண்ட 9 எம்.எம். கைத்துப்பாக்கியைச் சரிபார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது காவல்நிலைய ரைட்டர் சேதுகரன் தவறுதலாக ட்ரிகரை அழுத்தியதால் துப்பாக்கி வெடித்ததாகவும், அதிலிருந்து வெளியேறிய தோட்டா, காவல்நிலையத்தின் பக்கவாட்டுச் சுவரில் பட்டதாகவும் தெரியவந்தது. அப்போது காவல்நிலையத்தில் பொதுமக்கள் அதிகம் இல்லாமல் காவலர்கள் மட்டும் சிலர் இருந்தனர் எனத் தெரிவித்துள்ளனர். இதுப்பற்றிய அறிக்கை எஸ்.பி விஜயகுமாருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.